கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்..! - அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மூன்றரை கோடி மதிப்பில் கோவிலுக்கான திருக்கோவில் பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல்.



கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான அங்காளம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் கோவில் யானை 'ஷெட்'டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.



மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடு குறித்த திட்டத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது,



வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், பக்தர்களுக்கான இடம், மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும் 90 ஓமகுண்டங்களையும் முருகக்கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள 39 ஓம குண்டங்களையும் ஆய்வு செய்தேன்.

மேலும் அங்குப் புதிதாக அமைக்கப்பட்ட நிழற் குடைகளையும் ஆய்வு செய்து, ஆய்வுக் கூடம் மேற்கொள்ளப்பட்டது. கோவை பட்டீஸ்வரர் கோவிலில் மூன்றரை கோடி மதிப்பில் கோவிலுக்கான திருக்கோவில் பணிகள் நடைபெற உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க புராதான கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் 2022-23 நிதி ஆண்டில் 100 கோடி ரூபாய் முதல்வரால் இத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 104 கோவில்கள் இத்திருப்பணிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக முதல்வரும், இந்து சமய அறநிலையத்துறைக்குக் கேட்டதைக் கொடுத்து வருகிறார். ஆன்மீகவாதிகளுக்குச் சிறப்புறுகின்ற காலமாக இது அமைந்துள்ளது.

கோவிலின் அருகில் குப்பைகள் எங்குக் கூட்டப்பட்டாலும் அதனை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும், அதனை அகற்றுகின்ற பணியை இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொள்ளும். பேரூர் தேர் நிலை திடலைச் சீர் செய்வதற்கான ஒப்பம் கோரப்பட்டுள்ளது எனவும், கூடிய விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தேர் சுற்றி வரும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இருந்தால் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றித் தேர் சுற்றி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பேரூரில் தர்ப்பணம் கொடுக்கின்ற பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்றது எனவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுகிறேன், என்றார்.

மேலும் மருதமலை கோவிலில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பொருட்கள் தூக்கி வீசப்பட்டது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட துணிகள் தான் வீசப்பட்டன. அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அதேசமயம் இந்த வீடியோ வந்தவுடன் இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கோவில் புதுப்பிப்பு பணிகளில் பழமை மாறாமல் இருப்பதற்காகப் பிரத்தியேக கலைஞர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், தொன்மையான பொருட்களைப் பொக்கிஷமாக இந்த ஆட்சி பாதுகாக்கும் எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கோவிலில் சிவராத்திரி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ஐந்து கோவில்களில் நடைபெறுகிறது. அதில் கோவையில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலிலும் ஆகும். ஐந்து கோவில்களிலும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

மேலும் அங்கு பல்வேறு கோவிலிலிருந்து பிரசாதங்கள் வரவழைக்கப்பட்டு பக்தர்களுக்குத் தரப்படும் மேலும் ஸ்டால்கள் அமைத்து பல்வேறு ஆன்மீக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும். பல்வேறு இசைக்கருவிகளும் வரவழைக்கப்பட்டு அன்றைய தினம் நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

கோவையில் 3 ஏக்கர் பரப்பளவில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது எனக் கூறிய அவர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதற்கான வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம், அடிப்படை வசதிகள் போன்றவற்றைச் செய்து தரப்படும் என்றார்.

எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில், இந்த ஆட்சியில் 407 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. வெகு விரைவில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 3.5 கோடி மதிப்பில் நடக்கும். சுமார் 2000-க்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு லட்சம் ரூபாய் இருந்த நிதி உதவி இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாதவர்கள் திராவிட கழகத்தின் மீது பல்வேறு அவதூறுகளைச் சொல்லி வருகிறார்கள்.

அதனைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை எங்களுடைய பணி மக்களைச் சார்ந்தது எனத் தெரிவித்தார். இந்த ஆட்சி ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சி.

ஆன்மீக புரட்சி ஏற்படுகின்ற ஆட்சி. இதுபோன்ற திருப்பணி எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை, என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...