உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

பருவமழை பொய்த்துப் போனதால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்துக் குறைந்துள்ளது. இதனால் இரண்டாம் போகத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவாகும்.


திருப்பூர்: உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களைக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.

இதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குப் பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மழை போதிய அளவு பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தொடர் மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவு நீர்மட்டம் 2 மாதம் நீடித்தது.



இதைத் தொடர்ந்து நெல் சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த சூழலில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, நாற்றங்கால் பருவமழை காலங்களில் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்குப் பின்பு அவ்வப்போதும் மழை பெய்து வந்ததால் பருவநிலை மாற்றம் ஏற்படவில்லை.

இதனால் பயிர்களும் நோய் தாக்குதலிலிருந்து தப்பித்து நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டியது. தற்போது 2ஆம் போகச் சாகுபடியைத் தொடங்கி உள்ளோம். நாற்றங்கால் அமைத்து நிலத்தை உழுது பண்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.



இந்த சூழலில் அணையின் நீராதாரங்களில் நிலவுகின்ற வெப்பத்தின் தாக்குதல் காரணமாக நீர்வரத்து குறைந்து அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் நெற் பயிர்கள் அறுவடையை எட்டும் சூழலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.

தற்போது நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 80.94அடி உயரத்திற்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.



அணையிலிருந்து வினாடிக்கு 890 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...