தாராபுரம் நகராட்சி சார்பில் மகளிர் உதவிக்குழுவுக்கு நிதி வழங்கல்

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 2ஆவது வார்டு பகுதியில் புதிய மழை நீர் வடிகால்கள், புதிய கல்வெட்டு அமைக்கும் பணிகளை நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



பின்பு நகராட்சியின் சார்பாக மல்லிகா பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன், நகராட்சி உதவிப் பொறியாளர் காளீஸ்வரி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் நந்தினி பிரியா, சியாமளா, 2ஆவது வார்டு செயலாளர் மோகன்ராஜ், வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வார்டு பொருளாளர் ஜெயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் பாண்டி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் லட்சுமணன், வட்ட கழக இன்னாள் முன்னாள் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...