ஜெபக்கூட்டம் நடத்தப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட எஸ்.பியிடம் மனு

ஜெபக்கூட்டம் நடத்த இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கல்.


கோவை: ஜெபக்கூட்டம் நடத்துவதற்குச் சிலர் இடையூறு செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக் நேசகுமார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை பிரஸ் காலனியில் உள்ள சக்தி நகர் இரண்டாவது வீதியில் ஏல்பெத்தேல் ஜெப வீடு என்ற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறேன். கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த கோபால், ராஜேஷ், லாரன்ஸ் ஆகிய மூன்று பேரும் ஜெபக்கூட்டம் நடத்த இடையூறு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, ஜெப வீட்டில் ஜெப கூட்டம் நடத்தலாம் என உத்தரவு பெறப்பட்டு அமைதியான முறையில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறேன். இந்நிலையில் மீண்டும் அவர்கள் இடையூறு செய்தும், ஜெப கூட்டத்தில் வருபவர்களையும் மிரட்டியுள்ளனர். மேலும் ஜெப வீட்டைப் பழுது பார்த்த போது சில நபர்களுடன் வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில், தற்பொழுது இவர்களால் ஜெபக்கூட்டம் நடத்தாமல் இருப்பது தனக்கு மன உளைச்சலை தருகிறது. எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெப வீடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க ஆவணம் செய்யுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...