சூலூரில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது

சூலூரில் கைப்பையில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற வடமாநிலத்தவரிடம் இருந்து 1.5கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்.


கோவை: சூலூர் சுல்தான்பேட்டை அருகே கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்கலேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையபாளையம் பிரிவு பகுதியில் நின்று கொண்டிருந்த வடமாநில வாலிபரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைப்பையைச் சோதனை செய்தனர். அதில் மஞ்சள் நிறத்தில் சாக்லேட்டுகள் இருந்துள்ளது. அந்தச் சாக்லேட்டை பிரித்துப் பார்த்தபோது அது கஞ்சா சாக்லேட் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த நபரை சுல்தான்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர் பீகார் மாநிலம் கங்குலி கிராமத்தைச் சேர்ந்த பப்லு குமார் என்பது தெரியவந்தது. மேலும் பீகார் மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி வந்து இங்குள்ள வட மாநில நபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரிய வந்தது.



அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...