தாராபுரத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடத்தை அடுத்த சூரியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சந்திர காந்தா, பாமா ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டாரப் பொறுப்பு மேற்பார்வையாளர் அமுதா மற்றும் குண்டடம் ஒன்றிய கவுன்சிலர் அருண் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதியோர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் அளித்தும் சூரியநல்லூர் வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உடன் பயிற்றுனர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர், மையத்தின் கற்போர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...