தாராபுரத்தில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆர்.டி.ஓ. குமரேசன் முகாமை தொடங்கிவைத்தார்.

இந்த முகாமில், கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை முதுநிலை கண் பரிசோதகர் டாக்டர் நிவேதா மற்றும் கண் மருத்துவ குழுவினர் முகாமில் கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை, கண் ரத்த அழுத்த பரிசோதனை, மாலைக்கண், கண்ணில் சதை வளர்ச்சி, கண்ணில் சீழ் வடிதல், கண் புரை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இந்தப் பரிசோதனையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கி அவர்களை உயர் சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பிறகு, அவர்களுக்கு சாலை விதிகள் குறித்து அச்சிடப்பட்டுள்ள புத்தகம் மற்றும் துண்டு பிரசுரங்களை ஆர்.டி.ஓ. குமரேசன் வழங்கினார். சாலை விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கண் சிகிச்சை முகாமில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் ராஜாராம் உள்ளிட்ட ஏராளமான ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...