உடுமலை திருமூர்த்திமலை தைஅமாவாசை வழிபாடு - மாட்டுவண்டிகளில் வந்து விவசாயிகள் தரிசனம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டுவண்டிகளில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்தனர். திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு திதி வழங்கினர்.



இதற்கிடையில், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டுவண்டிகளில் வந்து அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி, நீண்ட நாட்கள் நலமுடன் இருக்க மாட்டுவண்டிகளுடன் வந்து தை அமாவசையையொட்டி தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், காங்கேயம் இனம் நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் எனவும் பல ஆண்டுகளாக இங்கு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...