கோவை இடையர்பாளையத்தில் கேரள லாட்டரிகள் விற்பனை - ஒருவர் கைது

கோவை இடையர்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இடையர்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மகாலட்சுமி பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை ஒரு நபர் விற்பனை செய்துவந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள், 1200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...