பிப்.2ல் பூமிக்கு அருகில் வரும் அரிய பச்சை வால் நட்சத்திரம் - 50, 000 ஆண்டுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்

நாசாவால் கடந்த ஆண்டு சி/2022 இ3 (ZTF) எனப்பெயரிடப்பட்ட அரிய வகை பச்சை வால் நட்சத்திரம், 50 ஆயிரம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி 2ம் தேதி பூமிக்கு அருகில் வரவுள்ள அதிசயம் நிகழவிருக்கிறது.


கோவை: அண்டவெளியானது சூரியக் குடும்பங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும் உள்ளடக்கியது. பிரபஞ்சம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் உலக நாடுகள் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வானியல் ஆய்வாளர்கள் இந்த அரிய வகை பச்சை வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். இதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சி/2022 இ3 (ZTF) எனப் பெயரிட்டது.



இந்த அரிய வகை பச்சை வால் நட்சத்திரமானது 50 ஆயிரம் ஆண்டுக்குப் பிறகு வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2ம் தேதிகளில் பூமிக்கு அருகில் வரவுள்ளது. இதை, பகல் நேரங்களில் தொலைநோக்கி மூலம் பார்த்து ரசிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பூமியில் இருந்து சுமார் 26 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் இந்த பச்சை வால் நட்சத்திரத்தை இரவு நேரங்களில் வெறும் கண்களால் கூட பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது பூமிக்கு அருகில் வரும்போது எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதை வெறும் கண்களால் பார்க்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவரும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் இதற்கு முன்பாக சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியை நெருங்கி வந்திருக்கலாம் எனக் கூறும் விஞ்ஞானிகள், கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வந்தது. அதன்பிறகு, 50ஆயிரம் ஆண்டுகள் கழித்து தற்போதுதான் பூமியை மீண்டும் நெருங்கி வர இருப்பதாகவும் கூறுகின்றனர்.

சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் ஒரு சுற்றுவட்டப் பாதையில் மட்டுமே இந்த அரிய வகை பச்சை நிற வால் நட்சத்திரம் பயணித்து வருவதாலேயே, இதன் பயணம் மிக நீண்டதாக இருப்பதாக தெரிக்கின்றனர்.

மேலும், சூரியனை வெற்றிகரமாக சுற்றிவந்த பிறகு இந்த பச்சை வால்நட்சத்திரம் மீண்டும் விண்வெளிக்குள் மிக அதிக தூரத்திற்குள் சென்றுவிடும் என்பதால், பூமிக்கு அருகில் இந்த வால் நட்சத்திரம் வருவது இதுவே கடைசியாக இருக்கலாம் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...