கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

காந்திபுரம் பேருந்து நிலைய பொது கழிவறை அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், புதிதாக கஞ்சா விற்பனையை தொடங்கிய இளைஞர் கைது.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரிடம் சுமார் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சபரி (22) என்பது தெரியவந்தது. வெல்டிங் பணி செய்து வந்த இவர், கஞ்சா விற்பனையை தொடங்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...