கோவை பேரூர் அருகே தோட்டத்தில் பம்ப் செட்களை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்..!

பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளை பாசன உபகரணங்கள், சொட்டு நீர் பாசன உபகரணங்களை உடைத்து சேதப்படுத்தியதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.


கோவை: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த யானைகள் உணவுக்காக மலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களில் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமத்தில் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.



இவரது இன்று அதிகாலை புகுந்த 12 யானைகள் கொண்ட யானை கூட்டம் நடராஜன் தோட்டத்திற்குள் புகுந்து 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்த உபகரணங்களை உடைத்தது மட்டுமல்லாமல், அங்கு தக்காளி பயிருக்கு போடப்பட்டு இருந்த சொட்டு நீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது.



அதேபோல், அதன் அருகில் உள்ள நாகர் பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரை ஏக்கர் தீவனப் புற்களை மேய்ந்து விட்டு சென்றுள்ளது.

இந்நிலையில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...