தாராபுரம் சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விழா - மாணவிகள் கொண்டாட்டம்

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ பெண்கள் விடுதியில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவிகள் திரும்பி வந்த நிலையில், விடுதி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் சி.எஸ்.ஐ. பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், சுமார் 120 க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர்.



பொங்கல் விடுமுறை முடித்து விட்டு பள்ளிக்கு வந்த விடுதி மாணவிகளுக்கு விடுதி காப்பாளர் பொன்.சுகன்யா ஒருங்கிணைப்பில் இன்று (21/01/2023) பொங்கல் விழா நடைபெற்றது. விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள பெண்கள் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், விடுதியின் தாளாளர் ஹெலன் பிரேம் குமாரி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் ஜாக்குலின் சமையலர்கள் சந்திரா, சுசீலா, விடுதி காவலர் வேலுச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...