ஊட்டியின் அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலான 10 நாள் புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது.



நீலகிரி: தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ஒவ்வொரு மாவட்டமாக ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கிய என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைபட கண்காட்சி நடத்தபட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 10 நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்தக் கண்காட்சியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு துறைகள் சார்பாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்குகளை அவர் பார்வையிட்டார். அதில், வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக வைக்கபட்டுள்ள அரங்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



குறிப்பாக, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட புகைபடங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவற்றை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.



முன்னதாக, 98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மகளிர் குழுவினருக்கு மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் வழங்கினார். இன்று தொடங்கியுள்ள இந்தக் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை சிறப்பு திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி கோட்டாச்சியர் துரைசாமி, வட்டாச்சியர் ராஜ்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...