கோவை கணுவாய் கோழிப்பண்ணையில் நுழைந்து கோழியை பிடித்து சென்ற சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இன்று அதிகாலை புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கோழியை பிடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கணுவாய் மற்றும் தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள், காட்டு பன்றிகள் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர், சோமையனூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை ஆடுகளை தூக்கி சென்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.



இந்நிலையில், கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் யமுனா நகரில் அஸ்வின் என்பவருக்கு சொந்தமாக கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது.



இதனிடையே இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இந்த கோழிப் பண்ணைக்குள் நுழைந்த சிறுத்தை, பண்ணையில் இருந்து கோழிகளை பிடித்து சென்றுள்ளது.



இது குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள்தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி, கால்நடைகளை பிடித்து செல்லும் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...