தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவு - திமுக எம்பி, அமைச்சர் அஞ்சலி

தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தியின் உடலுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஆ.ராசா எம்பி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி.


கோவை: கோவை காந்திபுரத்தில் வசித்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி இன்று காலமானார்.



அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.



இதைத் தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...