உடுமலை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை வேளாண் பல்கலை மாணவர்கள்!

வேளாண் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி பகுதியில் கோவை வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் வேளாண் துறையின் சார்பில் விவசாயத்திற்கு செயல்படுத்துகின்ற திட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது மண் மாதிரிகளைச் சேகரித்தும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலமாக மண்ணை பரிசோதனை செய்தனர்.

அதில் உள்ள குறைபாடுகளுக்குத் தகுந்தாற்போல் ஊட்டச்சத்து உரங்களை இடுவதற்கும் விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளித்தனர்.

மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்,துணை வட்டார வளர்ச்சி அதிகாரி, விதை ஆய்வாளர், வேளாண் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தகவல்களை அளித்தனர்.

அப்போது விவசாயிகள், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...