கோவையில் தாத்தா, பாட்டிகள் தினம் - பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற குழந்தைகள்!

கோவையில் முதியோர்களை போற்றும் வகையில், குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, பாதபூஜை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மாறி வரும் நவீன உலகில் கூட்டுக்குடும்ப முறை மெதுவாக குறைந்து வருகிறது.



இந்நிலையில், கூட்டு குடும்ப முறையை போற்றும் விதமாகவும், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.



அதில், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாதபூஜை செய்தனர்.

தொடர்ந்து, தாத்தா பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு உள்ள புரிதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் கூறுகையில், கூட்டு குடும்ப முறைகள் தற்போது குறைந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் உறவினர்களின் அருமை மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...