டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி - திருப்பூர் அணி அசத்தல்

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடைபெற்ற டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆந்திரா அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி.


திருப்பூர்: 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணி, ஆந்திர அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டி.எஸ்.சி சேலஞ்சர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பூனே உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எட்டு அணிகள் கலந்து கொண்டன. டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபிக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் திருப்பூர் மற்றும் ஆந்திர அணி மோதின. இதில் முதலில் விளையாடிய ஆந்திரா அணி 133 ரன்கள் எடுத்தது.



134 என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணியினர் வெற்றி இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றனர்.



இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், இந்தியன் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் உள்ள சரத் ஸ்ரீதர் , தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பழனி உள்ளிட்டர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கும், கலந்து கொண்ட மற்ற அணியினருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...