கோகுல்ராஜ் கொலை வழக்கு: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவில் வளாகத்தைப் பார்வையிட முடிவு

கோகுல்ராஜ் இருந்ததாக வீடியோவில் கடைசியாகப் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.



சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். தன்னுடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரிடம் நட்பாகப் பழகினார். இருவரும் கடந்து 2015 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சந்தித்துள்ளனர்.

அதன் பிறகு வீடு திரும்பவில்லை. கோகுல்ராஜின் பெற்றோர்கள் அவரைத் தேடி வந்த நிலையில் மறுநாள் கோகுல்ராஜின் உடல் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தலை வேறு உடல் வேறு என உடலைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை எனப் பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

இதையடுத்து கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்ததாகச் சேலம் சங்கரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், ஐந்து பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட வன்கொடுமை தரப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தண்டனை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உட்பட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். விடுதலையான ஐந்து பேருக்குத் தண்டனை வழங்கக் கோரி கோகுல்ராஜ் தாயாரான சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்த போது, வீடியோ காட்சிகளை ஒளிபரப்பிய நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் சுவாரி மாறி மாறி சாட்சியம் அளித்ததாகக் கூறி அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோகுல் ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்துச் சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக வாதிட்டார்.

கோகுல்ராஜும், சுவாதியும் பேசிக்கொண்டிருந்த போது, தான் சென்று விசாரணை நடத்தியதைத் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் யுவராஜ் சுட்டிக்காட்டினார். மேலும் கோகுல்ராஜிடம் இருந்து சுவாதியை பிரித்து அழைத்துச் செல்வதற்கான சிசிடி காட்சிகள் உள்ளதாகவும், தற்கொலை வீடியோ எனச் சொல்லப்படும் காணொளி குற்றச்சாட்டப்பட்டவர்களின் செல்போனில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

அதேபோல இந்த வழக்கில் ஐந்து பேரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. கோகுல்ராஜ் இருந்ததாகக் கடைசியாகப் பதிவான திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோயிலின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி ஆகியவை குறித்துப் புரிந்து கொள்வதற்காக நாளை தினம் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பிலான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் எட்டு சிசிடிவி கேமராக்கள் உள்ளதாகவும், அதில் இரண்டு சிசிடி கேமராக்களை பதிவான காட்சிகள் மட்டுமே காவல்துறையினர் ஆய்வு செய்தாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான வீடியோ குறித்தும், வீடியோ பதிவான மெமரி கார்டு தொடர்பாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை எடுத்து வழக்கின் விசாரணையே வரும் 27ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...