தாராபுரத்தில் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.! - பார்வையாளர்கள் உற்சாகம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் இணைந்து 10ஆண்டாக நடத்திய ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 10வது ஆண்டாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இன்று காலை 6.30 அளவில் இந்தப் போட்டி தொடங்கியது.



இந்தப் போட்டியை திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.என். வேணுகோபாலு தொடங்கிவைத்தார்.

திமுக மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ரஜினி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் தாராபுரம், பழனி, சத்திரப்பட்டி, திருப்பூர், பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.



சுமார் 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் 300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.



ரேக்ளாவில் பங்கேற்ற காளைகள் பந்தய தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...