கோவையில் பெண்களுக்கு 'வாரிசு' பட ஸ்பெஷல் ஷோ - விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தல்

கோவை சாவடி பகுதியில் கவிதா சினிமாஸ் திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பெண்களுக்கென வாரிசு பட சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் "வாரிசு" பட வெற்றியை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுக்கரை ஒன்றிய இளைஞரணி துணை செயாலாளர் ரமேஷ் ஏற்பாட்டில், சாவடி பகுதியில் அமைந்துள்ள கவிதா சினிமாஸ் திரையரங்கில் வாரிசு படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ், மாணவரணி தலைவர் பாபு,தொண்டரணி தலைவர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டு, படம் பார்க்க வந்த பெண்களை வரவேற்றனர்.



பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற "வாரிசு" படத்தை நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் பார்த்துரசித்தனர்.



இதில், தொண்டரணி அருண் ஈஸ்வர் இளைஞரணி நிர்வாகிகள் மணிகண்டன், மகேஸ்வரன், ப்ரியமுடன் சிவா, மதுக்கரை ஒன்றிய தலைவர் நாகராஜ், செயலாளர் தளபதிமுருகேஷ், கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் நாகராஜ், கல்லபுரம் பழனிச்சாமி, தொண்டமுத்தூர் வெள்ளச்சாமி, மதுக்கரை விமல், திருமலையம்பாளையம் அய்யாசாமி, சாவடி சக்திவேல் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், தலைவர் மகாலட்சுமி, செயலாளர் காளீஸ்வரி, வெண்ணிலா, ஈஸ்வரி, வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...