உடுமலையில் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு - சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அணையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, குடிநீரை சுத்திகரித்து உடுமலை நகராட்சி 2வது கூட்டு குடிநீர் திட்டம் மடத்துத்துக்குளம், குடிமங்கலம், உடுமலை ஒன்றிய பகுதிகளுக்கு பூலாங்கிணறு. கணக்கம்பாளையம், மடத்துக்குளம் குடிமங்கலம், புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக செல்லும் ராட்சத குடிநீர் குழாய் ஒன்றில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூலாங்கிணறு பகுதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி சாலைகளில் ஓடி வீணாகி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...