உடுமலை பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு.


திருப்பூர்: திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒரே குன்றில் ஒருசேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிமார், நவக்கிரக சன்னதிகளும் உள்ளது.



கோவில் அடிவாரத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.



அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

பஞ்சலிங்க அருவிக்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.



இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.



இதற்கிடையில் கோவில் நிர்வாகமும் வனத்துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...