உடுமலை பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை திறக்க கோரிக்கை

உடுமலை பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்கள் வசதிக்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை அதிகாரிகள் எப்போது திறப்பார்கள் என ஏக்கத்துடன் காத்திருப்பு.


திருப்பூர்: உடுமலையில் பொதுமக்கள் சாலையைச் சிரமமின்றி கடக்கப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை திறக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து நிலையம் உள்ளது. இதனால் சாலையைக் கடக்கப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.



இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உடுமலை-பொள்ளாச்சி சாலை நடுவே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனாலும் அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் உள்ளது.



இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே சாலையைக் கடந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு பக்கமும் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நடைமேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...