பல்லடம் அருகே பொதுமக்களிடம் நூதன மோசடி - முற்றுகையால் பரபரப்பு

பல்லடத்தில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நூதன முறையில் மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: பல்லடம் அருகே தொழிலதிபர் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் சொத்துப்பத்திரங்களை வாங்கி கடன் பெற்று ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்பக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தன்னை தொழில் அதிபர் எனக் கூறிக்கொண்டு பலரிடம் நூதன முறையில் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு வங்கியில் அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுக் கொள்வார்.

பின்னர் புதிய தொழில் தொடங்கி முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சொற்ப தொகையைப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



இந்நிலையில் கோவை,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் வடுகபாளையத்தை அடுத்த ஸ்ரீ ஸ்ரீ கார்டன் பகுதியில் வசித்து வரும் சிவக்குமாரின் சகோதரர் விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...