பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து தர்ணா

பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.


திருப்பூர்: வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் தீ வைத்துக் கொளுத்துவதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் சல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் குடியிருப்புக்கு அருகே கொட்டப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுவாசக்கோளாறு ஏற்படுவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.



ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பழைய பொள்ளாச்சி சாலை செல்லும் வழியில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...