சங்கரா கல்லூரியில் சமையல் துறை மாணவர்களுக்கான சங்கரா மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் போட்டி நடைபெற்றது


தேசிய அளவிளான மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் துறை மாணவர்களுக்கான சமையல் போட்டி, சங்கரா கல்லூரியின் சமையல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதுமிருந்து சமையல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இப்போட்டியானது பங்குபெறுவோரின் சமையல் திறன், படைப்பாற்றல் மற்றும் குழுவாக செயல்படுவது ஆகிய திறன்களை சோதிக்கும் விதமாக நடத்தப்பட்டது.



பழங்கள் மற்றும் காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், இரும்பு சமையலர், போன் கிளேசியர், வினாடி-வினா போட்டி, கட்டுரை சமர்ப்பித்தல், கேக்குகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



கொச்சினில் உள்ள ட்ரிடன்ட் ஓபராய் நட்சத்திர உணவு விடுதியின் தலைமை சமையலராக இருக்கம் பி.குமரன், கோவை லீ மெரிடியன் நட்சத்திர விடுதியின் தலைமை சமையலர் அப்துல் ரகுமான் ஆகியோர் மாணவர்கள் சமைத்த உணவுகளை ருசித்து சிறந்த உணவைச் சமைத்த மாணவருக்கு பரிசினை வழங்கினர்.



இதில் முதல் பரிசை பெங்களூரைச் சேர்ந்த க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்களும், இரண்டாம் பரிசை சென்னிஸ் விடுதி மேலாண்மை கல்லூரி மாணவர்களும் வென்றனர். சுழற்கோப்பையை க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் வென்றனர்.

சங்கரா கல்விக் குழுமங்களின் இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...