கோவையில் ஆட்டோ ஓட்டுநர் எரித்துக்கொலை - ஒருவர் கைது

கோவையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மீது மர்ம நபர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவத்தில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது50). லோடு ஆட்டோ ஓட்டுநரான இவர், காலை லோடு ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது, அங்குவந்த நபர் ஒருவர், திடீரென ரவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.



இதில், ரவி 90 சதவீதம் அளவுக்கு படுகாயமடைந்தார். இதைப்பார்த்ததும், அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து ரவியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பீளமேடு போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேருநகரை சோ்ந்த கூலித்தொழிலாளி பூபாலன் (வயது40) என்பது உறுதியானது. இதையடுத்து, பூபாலனை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...