'ஆளுநர் பதவியே வேண்டாம்..!' - திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்

தமிழகத்திற்கு ஆளுநர் ரவி மட்டுமல்ல, ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: எஸ் டி பி ஐ கட்சியின் கொங்கு மண்டல மாநாடு திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிட வேண்டும். தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்பில் தமிழருக்கு 7.5 சதவீதம் வழங்க ஆணையிட வேண்டும். கொங்கு மண்டலத்தில் நலிந்துவரும் தொழில் வளத்தை பாதுகாத்திட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறிக் கொள்ளும் திமுக. அதே பணியை மேற்கொள்ளும் தங்கள் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவதற்கு அலைக்கழித்தது ஏன் என தெரியவில்லை. ஆளுநரை வெளியேறுங்கள் என முதலில் குரல் கொடுத்து போராட்டத்தில் இறங்கியது எஸ்டிபிஐ கட்சி. பாஜகவை எதிர்க்க தமிழகத்தில் எவ்வாறு அனைத்து ஜனநாயக கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து வீழ்த்தியதோ, அதே வழிமுறையை இந்தியா முழுவதும் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் ஜனநாயகத்திற்கு எதிரான சித்தாந்தத்தை அமல்படுத்த அதிகாரிகள் முயல்கின்றனர். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டு இருக்கிறோம். தமிழக அரசைப் பொறுத்தவரையில், ஆளுநர் ரவி வெளியேற்றப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, ஆளுநர் பதவியே வேண்டாம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.



மாநாட்டில் பேசிய திருமுருகன் காந்தி , கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டார் எஸ் டி பி ஐ கட்சியின் கொங்கு மண்டல மாநாட்டின் அனுமதிக்காக, அவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தவறு எனவும், அதிமுக -பாஜகவை தோற்கடிக்க மாநிலம் முழுவதும் ஜனநாயக அமைப்புகள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக தற்போது திமுக ஆட்சி அமைத்திருப்பதாகவும், அதே திமுக தவறு செய்தால், அதனை விமர்சிக்கவும் தயங்க கூடாது எனவும் பேசினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...