கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரம்!

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக, பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடங்களை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. கரும்புக்கடை முதல் ஆத்துப்பாலம் வரையிலான வேலைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக, உக்கடம் பேருந்து நிலையம் எதிரே, இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

உக்கடம் பகுதியில் ஏறுதளம் அமைக்க, பாலக்காடு பேருந்துகள் நிற்குமிடத்தில் உள்ள வணிக வளாகத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தர வேண்டும். இதற்கான இழப்பீடு தொகையை ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலைத்துறை செலுத்திவிட்டது. இந்த வணிக வளாகம் இடிப்பு பணிகள் துவங்குவதற்கான கள ஆய்வுகளை நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்டனர்.



இந்நிலையில், இன்று காலை முதல் உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள சுமார் 20 கடைகளை கொண்ட வணிக வளாகத்தை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கட்டிடங்கள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டபிறகு மேம்பாலத்தின் ஏறுதளம் அமைக்கும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா மாநிலம் பாலக்காடு பேருந்துகள் நிற்கும் பேருந்து நிலையமும் தற்போது அகற்றப்படவிருப்பதால், கேரளா பேருந்துகள் இனி அருகே உள்ள மற்றொரு மேடையில் நிற்கும் எனவும், இடிப்பு பணிகள் நடப்பதால் அருகே பொதுமக்கள் யாரும் அந்தப் பகுதிச் செல்ல வேண்டாம் எனவும் ஒலிப் பொருக்கி மூலம் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்திவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...