திருப்பூர் உடுமலை அருகே காட்டுப்பன்றியால் விபத்து - ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையின் குறுக்கே கூட்டமாக ஓடிய காட்டுப்பன்றிகளால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தும்பலபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வேலை நிமித்தமாக, தனது நண்பர் அசோக்குமார் உடன் இரவு 10 மணிக்கு கவுண்டனூர்சாலையில் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விளைநிலங்களில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக சாலையின் குறுக்கே ஓடின. இதனால், பைக் நிலைதடுமாறியதால், பிரபாகரன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரபாகர் பரிதாபமாக உயிர் இழந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து குமாரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பன்றியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...