கோவை கவுண்டம்பாளையத்தில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, கவுண்டம்பாளையம் முல்லை நகர் சுற்றுப் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, முள்ளுக்காடு பகுதியில் சந்தேகம் படும்படி நின்றுக் கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பதும், அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...