கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி முதல்வராக அஜய்பரதன் பொறுப்பேற்பு

சிஆர்பிஎப் ஐ.ஜி யாக பணியாற்றி வந்த அஜய்பரதன் கோவை சிஆர்பிஎப் மத்திய பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: முதுகலை பட்டப்படிப்பை முடித்த அஜய்பரதன் கடந்த 1986ல், சிஆர்பிஎப் கெசட் அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பஞ்சாப், வட கிழக்கு ஜம்மு காஷ்மீர், சத்தீஷ்கர், மற்றும் நக்சல்கள் தீவிரவாத அச்துறுத்தல்கள் உள்ள இடங்களிலும் பணியாற்றி உள்ளார்.

கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி கமாண்டென்டாகவும், பணியாற்றி கடந்த 2015ல் சிறந்த கல்லூரிக்கான விருதை பெற்றுக்கொடுத்துள்ளார். மேலும் உள்துறை பாதுகாப்பிற்கான பதக்கத்தை 50 ஆவது சுதந்திரதின விழாவின் போது பெற்றுள்ளார்.

இந்த 75 ஆவது சுதந்திரதினத்தின் போதும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் பெற்ற பெருமையுடையவர். இன்று கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...