கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவரை வெட்டிய மர்ம கும்பல் - நள்ளிரவில் பரபரப்பு

கோவை சரவணம்பட்டியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி சிவனந்தாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சரவணகுமார்(23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். நேற்று இரவு இவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் 20 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் சரவணகுமாரிடம் காமராஜபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞர் குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை ஆயுதங்களால் அடித்து உடைத்து சூறையாடினர். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் சரவணகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் வெட்டு காயம் விழுந்தது.

இதனைப் பார்த்து தடுக்க முயன்ற அவரது மாமா பாலசுப்ரமணியத்தையும் அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு காயம் விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...