ஊட்டி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பராமரிப்புப் பணிகள் முடக்கம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பூங்கா பராமரிப்பு பணிகள் பாதிக்கபட்டுள்ளன.



நீலகிரி: சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் மற்றும் நஞ்சநாடு, கல்லாறு, பர்லியாறு உள்ளிட்ட 9 அரசுப் பண்ணைகளில் 1200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 80% பேர் பணி நிரந்தரம் செய்யபடாமலும் தின கூலியாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் மட்டுமே பெற்று பணப்பலன்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.

இதனையடுத்து, 5 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பண பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் ஊக்க தொகை உயர்த்தி வழங்க வேண்டும்,



காலியாக உள்ள இடங்களை தற்காலிக பணியாளராக உள்ள தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப நிரப்ப வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணை படி தற்போது உள்ள தொழிலாளர்களை பண்ணை பணியாளர்களை அங்கீகாரிக்க வேண்டும் என்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்கா முன் கடந்த 9-ந்தேதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆனால், தோட்டக்கலை துறை நிர்வாகம் இதுவரை கோரிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள், இன்று காலை முதல் தாவரவியல் பூங்காவிற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த போராட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் 9 அரசு பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் பூங்கா பராமரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...