சூலூர் அருகே கார் விபத்து - ரோட்டரி சங்க மேனாள் தலைவரின் மனைவி பலி

கோவை மாவட்டம் சூலூரில் நிகழ்ந்த கார் விபத்தில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர் சுந்தர்ராஜனின் மனைவி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவரும், இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஏசியா கண்டத்தின் தலைவருமாக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன்.



இவர், தமது மனைவி பிரிசில்லாவுடன் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். சூலூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இதில், சுந்தர்ராஜனின் மனைவி பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்டர் சுந்தர்ராஜன் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மறைந்த பிரிசில்லா உடலுக்கு மலர் வளையம் வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...