'கேடுகெட்ட வெட்கமில்லாத எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது..!' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாட்டில் கேடுகெட்ட எதிர்க்கட்சியாக அதிமுக இருப்பதாகவும், ஓ.பி.எஸ்-ம் ஈ.பி.எஸ்-ம் போட்டிபோட்டுக்கொண்டு கமலாலயத்தில் காத்துக் கிடப்பதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


சென்னை: சென்னை புரசைவாக்கம் குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் 6.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரிலான சமுதாய நலக்கூடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.



அங்கு, 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை அவர் நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.



அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:



ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி சார்பில் இந்த திருமண மண்டபம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த முறை ரவிச்சந்திரன் இருந்தாலும், ஏராளமான திட்டங்களை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் செய்திருக்கிறார்.

நேரு ஸ்டேடியம் கட்டும்போது அப்புறப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் கண்ணப்பர் திடலில் வசிக்கின்றனர். அந்த மக்களுக்கு விரைவில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல இருக்க வேண்டும் என வாழ்த்துவார்கள். ஆனால், மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம்போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள். என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் காரில் ஏறச் சென்றார்கள். ஆனால், அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை கமலாலயத்திற்கு மற்றும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன்.

ஆனால், சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால், நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில்தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள். கேடுகெட்ட வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக உள்ளது. இதற்குமேல் நான் பேசவில்லை.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...