'ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து தான் போட்டியிடுகிறது..!' - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து களம் காண்கிறது எனவும், தேமுதிக சார்பாக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிட உள்ளதாக பிரமலதா விஜயகாந்த் அறிவிப்பு.


சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாகவும், அதிமுகவில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, அண்ணாமலை, ஜிகே வாசன் தேமுதிக-வுக்கு ஆதரவு கொடுத்தால் மனப்பூர்வமாக வரவேற்போம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் செயற்குழு பொதுக்குழு இடைத்தேர்தல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் சரிப்பார்ப்பு கட்சியினுடைய வளர்ச்சி குறித்த ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாகவும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை வேட்பாளராக தேமுதிக நியமித்துள்ளது.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்து களம் காண்கிறது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும் எங்களுடைய வேட்பாளராக கேப்டனின் ஆசிர்வாதம் பெற்ற எங்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தை, ஈரோடு கிழக்கு தொகுதியில் அறிவித்திருக்கிறோம். மாபெரும் வெற்றிக்காக நாங்கள் உழைப்போம். வேட்புமனுதாக்கல் மற்றும் பிரச்சார தேதி ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

தேமுதிக தொடங்கியது முதல் தற்போது வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். சில நேரங்களில் கூட்டணிக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். தற்போது தேமுதிக எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2011ஆம் ஆண்டு தேமுதிக வென்ற தொகுதி ஈரோடு கிழக்குத் தொகுதி.

இடைத்தேர்தலை இவ்வளவு சீக்கிரம் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் இறந்த சுவடு கூட மறையவில்லை. அதற்குள் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் 3 மாதத்திற்கு பிறகு இந்த இடைத் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அறிவித்தது, அறிவித்தது தான். எனவே தேமுதிக தனித்து களம் காண்கிறது.

பாஜக இன்னும் நிலையை அறிவிக்கவில்லை. அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து உள்ளன. அவர்களுக்கு சின்னம் உள்ளதா, இல்லையா என்ற கேள்வி உள்ளது. அவர்களும் நிலையை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேமுதிக தனித்து களம் காண்கிறது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...