குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி வீடியோ வைரல்

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை உலா வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நீலகிரி: சிறுத்தை நடமாட்டம் இருந்த வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் வனத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாகச் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடிக் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில் ராணுவ கல்லூரியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ராணுவ கல்லூரிக்குள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.



இந்த காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைவரலாகி வருகின்றன.



வனத்துறைக்கு ராணுவ கல்லூரியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ கல்லூரிக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...