இயற்கை விழிப்புணர்வுக்காக ஊட்டியில் மாணவர்கள் கல்வி சுற்றுலா

நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் ஊட்டிக்கு ஒருநாள் இயற்கை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.


நீலகிரி: இயற்கை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேர்ண்ஹில் காப்புக்காடு, மற்றும் பழங்குடியினர் ஆய்வு மையம் எம் பாலடா ஆகிய இடங்களுக்குத் தேசிய பசுமை படை சார்பாகப் பள்ளி மாணவர்களை ஒருநாள் இயற்கை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது.



இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களை அழைத்துச் சென்று காடுகள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்க்கை முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது, மாணவர்கள் இயற்கை கல்விச் சுற்றுலாவை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு இயற்கை குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் முக்கியத்துவம் அறிந்து கொள்ளவும், இங்கு வாழும் பழங்குடியின மக்களின் கலாச்சாரம், நீலகிரிக்கு உரித்தான தாவரங்கள், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள இது போன்ற சுற்றுலா அமையும் என்றார்.

வனவர் மேகர் நிஷா பேசுகையில், பிளாஸ்டிக் வனப்பகுதியில் வீசி எறிவதும், வனவிலங்குகளுக்கு உணவளிப்பதும் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதேபோல் நீலகிரி மாவட்ட இயற்கை விவசாய செயலாளர் ராமதாஸ் பேசுகையில், அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் சோலை வனப்பகுதிகளும் மூலிகை மற்றும் அரிய தாவரங்களும் அழிந்து வரும் அபாயத்தில் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு வனப்பகுதியில் நீர் நடைப் பயிற்சி, பட்டாம்பூச்சி, பறவைகள், தாவரங்கள் கண்டறிதல், தியானம், பழங்குடியினர் பாரம்பரிய அறிவு கற்பிக்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.சிவதாஸ் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...