முதல்வர் மீது அவதூறு கருத்து - சவுக்கு சங்கர் மீது கோவை காவல்நிலையத்தில் புகார்!

அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரும், திரைப்பட இயக்குநருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



அதில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து சமீப காலமாகச் சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களையும், போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து சமூக வலைத்தளத்தில் பேசி, பரப்பி வருவதாகவும், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இம்மாதிரி தமிழக முதல்வர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சவுக்கு சங்கர் கூறி வருவதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளையே அவர் மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ வெளியிடுவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் அவர் தேவையற்ற விமர்சனங்களைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான அவதூறான விமர்சனங்களைச் செய்து வரும் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...