புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் பொங்கல் திருவிழா மற்றும் புத்தாண்டு திருநாள் கொண்டாட்டம்.


கோவை: புலியங்குளம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குக் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் பரிசுகளை வழங்கினார்.



கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 66வது வார்டு புலியங்குளம் பகுதியில் நேற்று திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோலப்போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.



இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா, திமுக வட்டக் கழகச் செயலாளர் பாலமுருகன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திக் முன்னாள் எம்எல்ஏ கலந்து கொண்டு, கோலப்போட்டிகள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, வாழ்த்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...