உடுமலை அருகே அரசு பேருந்து மீது வாகனங்கள் மோதல்; 4 பேர் காயம்!

பழனி சென்று திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதி விபத்து. உடுமலை அருகே நடந்த இந்த விபத்தில் 4 பேர் படுகாயம்.


திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது கார்கள் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைமலையைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவர் தனது குடும்பத்துடன் காரில் பழனிக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.



இவர்கள் வந்த கார் திருப்பூர் மாவட்டம் உடுமலை -பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராகல் பாவி பிரிவு அருகே வந்தபோது, எதிராக வந்த கார் மீது மோதி முன் சென்ற அரசு மீது இரண்டு கார்களும் மோதியது.



இதில், இரண்டு கார்களின் முன்பகுதியும் சேதமடைந்தது. அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து காரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கதிர்வேலுக்கு பலத்த காயமேற்பட்டதால், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து குறித்து உடுமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவத்தில் அரசு பேருந்தில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...