17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கோவை இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

கோவையில் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: மதுக்கரையில் ஆசைவார்த்தைக் கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மதுக்கரையைச் சேர்ந்த மதன்குமார்(23), கேஸ் சப்ளை வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2020இல், கோவையைச் சேர்ந்த 17வயது சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார்.

மேலும் அவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் மதன்குமார் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் ஆள் கடத்தல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில் மதன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...