சூலூரில் கார்கள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பெண்கள் பலி

கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் முன்சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி.


கோவை: சூலூரில் நடந்த கார் விபத்தில் இரண்டு பெண்கள் பலி மற்றும் ஏழு பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது மனைவி மற்றும் இருமகளுடன் கோவையை நோக்கிக் காரில் சென்றுள்ளார். அப்போது கோவையிலிருந்து டாக்டர் மோகன் என்பவர் காரில் தனது தாய், தந்தையுடன் தாராபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஜெயராமன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பைத் தாண்டி டாக்டர் மோகன் ஓட்டி சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன.



கார்களில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் டாக்டர் மோகனின் தாய் பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இதேபோல் ஜெயராமனின் மனைவி அமுதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...