திருப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப் போட்டி - ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள மத்திய அரசுப் பள்ளியான கேந்திரிய வித்யாலாயாவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள மத்திய அரசின்கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி "பரீட்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டுமுதல் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவ மாணவியரை சந்தித்து தேர்வு பயத்தை நீக்குவதற்கான 25 மந்திரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.



இதை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் தேசிய அளவில் 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சுமார் 50,000 மாணவர்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியை இப்போட்டி நடத்தும் மையமாக மத்திய அமைச்சகம் தேர்வு செய்தது.

அதன் அடிப்படையில், உடுமலை கல்வி மாவட்டத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



ஓவியப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் உபகரணங்களும், அதுமட்டுமின்றி பிரதமர் எழுதிய "எக்ஸாம் வாரியர்ஸ்" என்ற புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.



மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த ஐந்து ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...