கோவையில் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 8 வயது சிறுவன் பலி - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ

கோவை போத்தனூர் அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீத். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராய்புதீன் (வயது 8) போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.



சிறுவன் ராய்புதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சைக்கிளில் விளையாடச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சயது முகமது பெரோஸ் என்பவர் தனது காரை திடீரென இயக்கியபோது, சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த சுற்று சுவர் மீது மோதி விழுந்தார்.

அதில், படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், பெரோஸ், கார் பின்னால் செல்வதற்கான ரிவர்ஸ் கீரை போடுவதற்கு பதிலாக, தவறி முதல் கியரை போட்டதே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சினிமா பாணியில் நடந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...