நீலகிரி மலைப்பாதையில் ஒற்றை யானை நடமாட்டம் - நள்ளிரவில் வாகனங்களை வழிமறித்த யானை

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் நள்ளிரவில் உலா வந்த ஒற்றைக் காட்டுயானை, அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கபட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. மிகவும் அபாயகரமான இந்த மலைப்பாதையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும்.

இந்த மலைப்பாதை வழியாக குறைந்த நேரத்தில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வர முடியும் என்பதால் ஏராளமானோர் இந்த வழியைத் தான் தினமும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள நபர்கள் மட்டுமே இந்த மலை பாதையில் மசினகுடிக்கு செல்வதற்கும், வருவதற்கும் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், கல்லட்டி மலைப்பாதையில் இரண்டு புறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதனால், காட்டு யானைகள் அதிக அளவில் இரவு நேரங்களில் சாலைக்கு வந்து விடுகின்றன. அவ்வாறு வரும் யானைகள், வாகனங்களை வழி மறிப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.



அந்த வகையில், நேற்று இரவு, 20-வது கொண்டு ஊசி வளைவில் ஒற்றை காட்டு யானை திடீரென சாலை நடுவே வந்து நின்றது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாத நிலை உருவானது. சுமார் அரை மணி நேரத்திற்குபிறகு அந்த யானை சாலையில் இருந்து ஓரமாகச் சென்றதையடுத்து, வாகனங்கள் அங்கிருந்த நகரத் தொடங்கியதால் போக்குவரத்து சீரானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...