தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற திருப்பூர் மாணவர்கள்!

ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.



திருப்பூர்: ஈரோட்டில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் 15 வயது வரையான மாணவ - மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனர்.



கத்தா மற்றும் குமித்தே பிரிவில் 13 தங்கம், 26 வெள்ளி, 39 வெண்கல பதக்கங்களை திருப்பூர் மாணவர்கள் வென்றனர். ஓபன் குமித்தே பிரிவில் மூன்று மிதிவண்டிகளை சிறப்பு பரிசாகவும் வென்றனர்.



தொடர்ந்து, கராத்தே சாம்பியன் சிப் பட்டத்தையும் திருப்பூர் மாணவர்களே கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...